பெருமாள் கோவிலில் சடாரியை தலையில் வைப்பது ஏன்

*பெருமாள் கோவிலில் சடாரியை தலையில் வைப்பது ஏன்?*

பெருமாள் கோவிலில் தரிசித்த உடன் நாம் எதிர்பார்ப்பது சடாரியை நம் சிரசில் வைத்து ஆசி பெறுவதைதான் முக்கியமாக எதிர்பார்க்கிறோம். அந்த சடாரி நம் தலையில் வைக்கப்பட்டாலே இறைவனுடைய ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்ட உணர்வு ஏற்படுவதை மறுக்க முடியாது. அதன் காரணம் சடாரியில் இறைவனுடைய பாதம் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது.

அகலிகை தன் கணவரின் சாபத்தால் கல்லாக மாறி ஸ்ரீராமரின் பாதம்பட்ட பிறகு சாபம் நீங்கி மீண்டும் பெண்ணாக மாறியதை போல, சடாரியை நம் தலையில் வைக்கும் போது சாபங்களும், தோஷங்களும் விலகுகிறது. காரணம், சடாரியின் மேல் ஸ்ரீமந் நாராயணனின் திருவடி பொறிக்கப்பட்டிருக்கும் என்கிறது சாஸ்திரம். ஒருசமயம், வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் வழக்கமாக தன் பாதுகையை விடும் இடத்தில் விடாமல் தன்னுடைய அறையில் கழற்றி வைத்தார்.

இதை கண்ட சங்கு, சக்கரம் மற்றும் கிரீடத்திற்கும் கோபம் ஏற்பட்டது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினால் சுவாமி கோபித்துக்கொள்வார் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தனர். அச்சமயம், ஸ்ரீமந் நாராயணனை தரிசிக்க முனிவர்கள் வந்திருப்பதாக தகவல் வந்ததால் முனிவர்களை காக்க வைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆதிசேஷன் மடியில் உறங்கிக் கொண்டு இருந்தவர் அவசர அவசரமாக எழுந்து. தன் பாதுகையை அணியாமல் சென்றார். ஸ்ரீமந் நாராயணன் வெளியே சென்றதால் மகிழ்சியடைந்த சங்கு, சக்கரம், கிரீடமும் ஸ்ரீமந் நாராயணணின் பாதுகைகளை பார்த்து, “கேவலம் பாதத்தின் கீழ் இருக்கும் நீ, ஸ்ரீமகாவிஷ்ணுவை அலங்கரிக்கும் நாங்கள் இருக்கும் இடத்தில் எப்படி எங்களுக்கு சரிசமமாக இருக்கலாம். நீ இருக்க வேண்டிய இடம் இங்கல்ல வெளியேதான் என்பதை மறந்துவிட்டாயா? என்னதான் கால்களுக்கு பாத பூஜை செய்தாலும் அது நன்றி இல்லாதது. கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கமால் தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட அந்த கால்களுக்கு அடியில் இருக்கும் உனக்கு எப்படி மரியாதை தர முடியும்.?” என்று ஏக வசனத்தில் பேசியது சங்கும், சக்கரமும். கீரிடமும்.

அதற்கு அந்த பாதுகை, “அப்படி பேசாதீர்கள். யாருக்கு ஆபத்தென்றாலும் உதவிக்கு ஓட உதவுவது கால்கள்தான். அந்த கால்களுக்கு மரியாதை செய்யவே பாதபூஜை செய்கிறார்கள். அப்படிபட்ட புண்ணியவான்களின் கால்களுக்கு பாதுகையாக இருப்பதில் எங்களுக்கு பெருமைதான்.” என்று கூறிய பாதுகை, “பெருமாளே என் பிறவி கேவலமானதா?” என்று அழுதது. அப்போது முனிவர்களை சந்தித்து விட்டு திரும்பி வந்த ஸ்ரீமந் நாராயணன், தன் அறையில் நடந்த சம்பவத்தை உணர்ந்துக் கொண்டார் சங்கு, சக்கரம் மற்றும் கிரீடத்தை அழைத்த ஸ்ரீமகாவிஷ்ணு, “ஒருவரை பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது அவர்களுடைய தவறை நீங்கள் விமர்சிக்கவில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அவர்களிடமே அதை பற்றி பொறுமையாகவும் தெளிவாகவும் பேசி தவறை திருத்த பார்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களின் மனம் நோகும்படியாக விமர்சிப்பது அவர்கள் மேல் இருக்கும் பொறமையால்தானே தவிர அவர்கள் மேல் இருக்கும் தவறால் அல்ல என்பதை முதலில் நீங்கள்புரிந்துக்கொள்ளுங்கள்.

பாதுகை இத்தனை நாள் வெளியே இருந்ததால் உங்களுக்கு அதன் மீது பொறாமை வரவில்லை. ஆனால் இன்றோ என்னுடைய அறையில் உங்களுக்கு சரிசமமாக வந்து விட்டதே என்ற எண்ணத்தில் பாதுகையின் மேல் பொறாமை கொண்டு கீழ் தரமாக பேசி இருக்கிறீர்கள். இதற்கு தண்டனையாக எனது இராம அவதாரத்தில் சங்கும், சக்கரமாகிய நீங்கள்தான் பரதன், சத்ருகனாக பிறப்பீர்கள். உங்களுக்கு அரசபதவி கிடைத்தாலும் அதனை ஏற்க முடியாமல் போகும். நீங்கள் எந்த பாதுகையை அவமானம் செய்தீர்களோ அதே என்னுடைய பாதுகையைதான் 14 வருடம் சிம்மாசனத்தில் வைத்து பூஜிப்பீர்கள். கிரீடமே… என் சிரசின் மேல் இருப்பதால்தானே உனக்கும் ஆணவம். அதனால் உன் மீதுதான் என் பாதுகையே இருக்கும்.” என்றார் ஸ்ரீமந் நாராயணன். கிரீடத்தின் மீது இறைவனின் திருவடி, அதாவது பாதுகை இருக்கும் சடாரியை நம் தலையில் வைத்து ஆசி பெற்றால் நமக்கும் நம்மை அறியாமல் உள்ளூணர்வில் இருக்கும் ஆணவம், அகங்காரம் அத்துடன் எல்லா தோஷங்களும் நீங்கும். இறைவனின் ஆசியை முழுமையாக பெற அருள் செய்யும் சடாரி.!

***சர்வம் கிருஷ்ணார்ப்பணம்***

ரமா ஏகாதசி

ரமா ஏகாதசி…….!!

க்ருஷ்ணபக்ஷ ரமா ஏகாதசி.
தனது பெயருக்குத் தக்கவாறு ஐச்வர்யத்தை அளிக்கும் அதை ஸ்திரப்படுத்தும். இதில் உபவாஸமிருப்பவன் ஸ்திரமான ராஜ்யத்தை அடைந்து விளங்குவான்.

சந்திரஸேனனின் புதல்வன் சோபனன். அவன் பசி தாங்காதவன். ஒரு வேளை கூட ஆஹார மில்லாமல் இருக்க முடியாதவன். இவனுக்கு முசுகுந்தன் என்ற அரசன் தன் பெண்ணான சந்தரபாகையை மணம் செய்து வைத்தான். இந்த அரசன் ஒவ்வொரு ஏகாதசிகளிலும் உபவாஸம் இருப்பவன். ப்ரஜைகளும் இவனது நிர்பந்தத்தால் உபவாஸம் இருப்பவர்கள். ஏகாதசி முந்தய தினம் ஒவ்வொரு வீதியிலும் நாளை ஏகாதசி, ஒவ்வொருவரும் உபவாஸம் இருக்க வேண்டும், விஷ்ணு பூஜை செய்ய வேண்டும் என்று தமுக்கு அடிக்கச் செய்வான்.

உபவாஸமில்லாதவனை தூக்கில் இட்டுவிடுவான். இது அவனது ராஜ்ய தர்மம். ஒரு சமயம் சோபனன் மாமனாரின் அகத்துக்கு வந்தான். அன்று ஏகாதசி. படர்கள் வழக்கம்போல முன் இரவும் அன்றும் பறைசாத்தினர். சோபனன் கவலைப்பட்டான். உணவு உண்டால் தலை போய்விடும் என்றும் மனைவி கூறினாள். இவன் பயந்து உபவாஸம் இருக்க அது தாங்க முடியாமல் மறுநாள் காலை இறந்துவிட்டான். முறைப்படி ஸம்ஸ்காரம் செயதனர். சில நாட்கள் கழிந்தன. இவன் மனைவி துன்ப ஸாகரத்தில் மூழ்கியிருக்க ஸோமசர்மா என்ற பெரியவர் தனது தீர்த்த யாத்ரையை முடித்து இவ்வூருக்கு வந்தார். கவலையுடன் உள்ள இப்பெண்ணைக் கண்டார். பெண்ணே நீ ஏன் அழுகிறாய். உன் கணவன் மந்தரமலையின் அருகில் ஒரு திவ்ய நகரத்தை ஆண்டு வருகிறானே. உன் பர்த்தா உயிருடன் இருக்க வ்யஸனம் ஏன் என்றார். இதைக் கேட்ட இவன் மனைவி தன் தந்தையுடன் அங்கு சென்று தன் கணவனைப் பார்த்து மகிழ்ந்தாள். அவனும் இங்கு வாமதேவமுனிவரின் அருளால் எனக்கு உயிர் வந்தது. ராஜ்யமும் கிட்டியது. நான் நிர்பந்தத்தின் பேரில் ச்ரத்தை இல்லாமல் ரமா என்னும் ஏகாதசியை உன் ஊரில் அநுஷ்டித்தேன். அதன் பலன் இது என்றான். இது அழியாமல் இருக்க என்ன செய்வது என்றும் கேட்டான். அப்பொழுது முனிவர் வந்து உன் மனைவி செய்த ஏகாதசியின் மஹிமையால் இது அழியாது என்று வரம் கொடுத்தார். இருவரும் ஸுகமாக இராஜ்யத்தில் வாழந்து ஏகாதசி வ்ரதத்தையும் நடத்தி வந்தனர்.

ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பவர் சந்தேகமின்றி ஒரு அந்தணரைக் கொல்லும் பாவத்திலிருந்து விடுபடுவார் கருப்பு நிற பசுக்களும் வெண்ணிற பசுக்களும் வெண்ணிற பாலையே கொடுப்பது போல் தேய்பிறை மற்றும் வளர்பிறையில் தோன்றும் இரு ஏகாதசிகளும் அதை அனுஷ்டிப்பவர்களுக்கு முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமத்தில் ஆனந்தமாக வாழ்வார்.

நவக்கிரக சன்னதியை வழிபடும் முறை

*நவக்கிரக சன்னதியை வழிபடும் முறை!*

எங்கிருந்து தொடங்க வேண்டும் :
================
*நடுநாயகமாக வீற்றிருக்கும் சூரியனில் இருந்தே தொடங்க வேண்டும்.*

சிலர் சனியிலிருந்து தொடங்குகிறார்கள்.அது தவறு.
சூரியனே எல்லாவற்றிற்கும் முதல்.

*எந்தப் பக்கம் சுற்ற வேண்டும் :*
================
வலமாக தான் சுற்ற வேண்டும்.
இடமாக சுற்றக் கூடவே கூடாது.
சிலர் அப்படி சுற்றுவதை காணமுடிகிறது.அது தவறு.

*எத்தனை முறை சுற்றுவது :*
================
*நவக்கிரகங்கள் என்பது ஒன்பது கிரகங்கள் என்பதால்*
*ஒன்பது முறை சுற்றுவதே உத்தமம்.*

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சுற்று என்பதே கணக்கு.

எதை நினைத்து சுற்றுவது ? எண்ணிகையை நினைத்தா கிரகங்களை நினைத்தா ?
================
எண்ணிக்கையை நினைத்து சுற்றினால் கிரகங்கள் நினைவில் நிற்காது.
கிரகங்களை நினைத்து சுற்றினால் எண்ணிக்கை தப்பிவிடும்.

இந்த பிரச்சனை எனக்கு சிறுவயதில் இருந்ததால், எனக்கு ஏற்ற வகையில் நானே ஒரு தீர்வைக் கண்டுப்பிடித்து இன்றும் அதை பின்பற்றுகிறேன்.

அது என்னவென்றால்,

*ஒவ்வொரு சுற்றிற்கும் கிரகங்களின் பெயரைப் போற்றிப் பாடுவதே அது.*

*ஓம் சூரியனே போற்றி !*

*ஓம் சந்திரனே போற்றி*

*ஓம் மங்களனே போற்றி !*

*ஓம் புதனே போற்றி !*

*ஓம் குருவே போற்றி !*
*ஓம் சுக்கிரனே போற்றி !*

*ஓம் சனைச்சரனே போற்றி !*

*ஓம் ராகுவே போற்றி !*

*ஓம் கேதுவே போற்றி !*

இப்படிப் போற்றி நவக்கிரகங்களை சுற்றும்போது எண்ணிக்கையையும் தவறாமல்,
கிரகங்களையும் மறவாமல் நினைவில் நிறுத்தி வணங்கலாம்.

இக்கிரகங்களின் வரிசை முறையை நினைவில் கொள்வது எப்படி :
================
சூரியனில் தொடங்கி சனியில் முடியும் வார நாட்களின் வரிசை முறையோடு ராகுவையும் கேதுவையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவே.

*நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் :*
================
நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் தெரிந்தவர்கள்
பின்வரும் மந்திரங்களை சொல்லியும் சுற்றலாம்

*சூரிய காயத்ரி மந்திரம்*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்.

*சந்திர காயத்ரி மந்திரம்*

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்.

*அங்காரக காயத்ரி மந்திரம்*

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்

*புத காயத்ரி மந்திரம்*

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

*குரு காயத்ரி மந்திரம்*

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

*சுக்ர காயத்ரி மந்திரம்*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

*சனி காயத்ரி மந்திரம்*

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

*ராகு காயத்ரி மந்திரம்*

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

*கேது காயத்ரி மந்திரம்*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

ஒன்பது முறை சுற்ற முடியவில்லை என்றால் :
===============
சில விசேஷ நாட்களில் அல்லது ஏதோ தவிர்க்க இயலா சமயங்களில்,ஒன்பது முறை சுற்றும் வாய்ப்பும் வசதியும் இல்லாத போது,

*ஓம் நவநாயகர்களே போற்றி ! “ என்று ஒரே ஒரு முறை மட்டும் சுற்றியும் வழிபடலாம் தவறொன்றும் இல்லை.*

எத்தனை முறை சுற்றுகிறோம் என்பதல்ல கணக்கு.
எந்த நினைப்பில் சுற்றுகிறோம் என்பதே தத்துவக் கணக்கு !

ஓம் நவநாயகர்களே போற்றி போற்றி

ஐப்பசி மாதம் பிறக்கிறது

ஐப்பசி மாதம் பிறக்கிறது

இந்த நாட்களை மறந்து விடாதீர்கள் !!
ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

⭐ ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில் சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம், தீபாவளிப் பண்டிகை, கந்தசஷ்டி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் நிறைந்துள்ளது.

*ஐப்பசி பௌர்ணமி :*

⭐ சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவனுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

⭐ எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.

⭐ சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று நமது குறைகளை நீக்கி பேறு அடையலாம்.

*ஐப்பசி சதயம் :*

⭐ ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மா மன்னர் ராஜராஜசோழன். அவரை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

*வளர்பிறை ஏகாதசி :*

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா” என்று அழைக்கப்படுகிறது.

⭐ இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை அகலும், பசிப்பிணி நீங்கும், பாவ விமோச்சனம் பெறலாம்.

*தேய்பிறை ஏகாதசி :*

⭐ ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது.

⭐ இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.

*கடைமுகம் :*

⭐ ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.

⭐ ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர்.

⭐ ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.

*தீபாவளி :*

⭐ தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பட்ச பிரதமை நாட்களில் கொண்டாடப்படுகிறது.

*கந்த சஷ்டி :*

⭐ கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

தீபாவளி தோன்றிய வரலாறு தெரியுமா

*தீபாவளி தோன்றிய வரலாறு தெரியுமா?*

தீபாவளி என்றால் நினைவிற்கு வருவது புது புது ஆடை மற்றும் வெடி வெடிக்கும் பட்டாசும் தான்.

இந்த நாளை ஏன் தீபாவளியாக அனைவரும் கொண்டாடுகிறோம். அதற்கு ஒரு கதை உண்டு.

*🔯’தீபம்” என்றால் ‘விளக்கு”. ‘ஆவளி” என்றால் ‘வரிசை”. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும்.*

*⚜புராணக் கதை :*

🎉 இரண்யன் எனும் அசுரன், பூமிதேவியை கடத்தி கொண்டு பாதாளத்தில் மறைந்தான்.
பூமிதேவியை மீட்க, பன்றி வடிவெடுத்து, தன் பற்களால் பூமியை அகழ்ந்து சென்றார், மகாவிஷ்ணு. இரண்யனை வதம் செய்த பின், பூமியை, தன் தெற்றுப் பல் நுனியில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பூமாதேவிக்கும், வராகருக்கும் ஏற்பட்ட இந்த ஸ்பரிசத்தில், பவுமன் பிறந்தான். பவுமன் என்றால், பூமியின் பிள்ளை என்று பொருள். ஆனால், இவன் சென்றால், அவ்விடத்தில் இருள் படியும் அளவுக்கு மிகவும் கறுப்பாக இருந்தான்.

🎉 பவுமன் திருமாலின் பிள்ளை என்ற தைரியத்தில், மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்து வந்தான். அத்துடன், தேவலோகத்துக்கு சென்று, இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், அவனது தாய் அதிதி அணிந்திருந்த, அமுதம் சொட்டும் குண்டலங்களையும் பறித்து வந்தான்.

🎉 மனிதனாய் பிறந்திருந்தாலும், அசுர குணத்துடன் விளங்கியதால், இவனை, நரகாசுரன் என்றே மக்கள் அழைத்தனர்.

அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

💣 இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும், பூமாதேவி சத்யபாமாவாகவும் பூமியில் அவதாரம் செய்தனர். பிறகு போர் நடந்தது.

💣 அசுரன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்யபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்யபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

💣 அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், மனம் திருந்திய நரகாசுரன், தன் இறந்த நாளை மக்கள் ஆனந்த திருநாளாக கொண்டாட வரம் கேட்டான்.

*⚜மகாவிஷ்ணுவும், சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.*

*💣 தித்திக்கும் தீபாவளியை தேன் சுவைக் கொண்ட இனிப்புகளோடு வெடி வெடித்து வண்ண வண்ண ஆடை அணிந்து கொண்டாட எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.*

*தீபாவளி பற்றி 7 கதைகள்*

தீபாவளி பண்டிகையின் சிறப்பினை பற்றி விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷதர்மம் ஸ்மிருதி முக்தாபலம், நித்யான்னிகம், துலா மகாத்மியம் போன்ற நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. இந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகை ஏற்பட்ட வரலாறு பற்றி பல கதைகள் புராணங்களிலும் நடைமுறையிலும் காணப்படுகின்றன.

1. ராவணனை வதம் செய்த பின் ராமபிரான் சீதையுடன் அயோத்திக்கு திரும்பி வந்தார். அப்போது மக்கள் தீப விளக்கு ஏற்றி வரவேற்று மகிழ்ந்தார்கள் இத்தினமே தீபாவளியாக அமைந்தது என்று கூறப்படுகின்றது.

2. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற் கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாயகங்கை பரமசிவனின் திருமுடியில் தங்கியது. கங்கை வேகம்தணிந்து பூலோகத்தில் பாய்ந்த தினம் தீபாவளி எனப்பட்டது.

அதனால் தான் கங்கா ஸ்நானம் செய்வது என்ற பழக்கம் ஏற்ப்பட்டது. மேலும் சிவனிடமிருந்து கங்கை பூமிக்குப் பாய்ந்த நேரமே பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இது அதிகாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும். சாம்பலாகிய பகீரதனின் சந்ததியினர் கங்கை நதியின் புனித தண்ணீர் பட்டு நற்கதியடைந்த தினமும் இதுவாகும்.

3. ஆறுமுகன் ஆறு பொறிகளிலிருந்து ஒளிப்பிழம்பாக தோன்றியவன் அவனை உடம்பிலுள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், ஏற்றி வழிபடுவதன் புறவடிவமே தீபாவளி என கௌமார மார்க்கத்தினர் கூறி வழிபடுகின்றனர்.

4. இந்தியாவில் வங்காள மக்கள் தீபாவளியன்று காளி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். அழிவுத் தொழிலை மிக உக்கிரமாக மேற் கொண்ட காளிதேவியின் தணியாத உக்கிரத்தை ஆதிசங்கரர் ஒரு தீபாவளி தினத்தன்று தான் தணித்தார்.

5. சமண சமயத்தைத் தொடங்கிய மகா வீரர் வர்த்தமானர் ஒரு தீபாவளியன்று மக்களுக்கு அருளுரை செய்து கொண்டிருக்கும் போதே முக்தி பெற்றார். அருளுரை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அவர் இறந்ததையறிந்து தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.

6. இன்று அஸ்ஸாம் மாநிலத்தில் காமரூபன் என அழைக்கப்படுகின்ற பிரக்ஜோதி புரத்தை ஆண்டு வந்த பூமாதேவியின் புதல்வன் பௌமன் என்பவன் அருந்தவம் செய்து பிரமனை வழிபட்டு பெரும் வரங்களைப் பெற்றான். இதனால் தேவர்கள், முனிவர்கள் என்று எல்லோரையும் துன்புறுத்தி வந்தான்.

உலகத்தை நரக வேதனைப்படுத்திக் கொண்டிருந்தமையால் இவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரனும் இதர முனிவர்களும் இவனது கொடுமைகள் தாங்காது கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தனர். கிருஷ்ண பகவான் சத்தியபாமாவின் துணையுடன் நரகாசுரனை வதம் செய்தார்.

அப்போது நரகாசுரன் கிருஷ்ணபவானை வணங்கி நான் செய்த பாவங்களைப் பொறுத்துக் கொள்வதுடன் கொடியவனாகிய நான் இறக்கும் இத்தினத்தை மக்கள் அனைவரும் மங்களகரமான நாளான மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இத்திருநாளே பரவலாகப் பெரும்பாலான மக்களால் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாடுவர். முதலாம் நாள் சோட்டா தீபாவளி என்று சிறிதாக கொண்டாடுவர். மறுநாள் படா தீபாவளி என்று விமரிசையாக கொண்டாடுவர். மூன்றாம் நாள் கோவர்த்தன பூஜை செய்து கண்ணனைப் பிரார்த்தனை செய்வார்கள். அன்று லட்சுமியை வழிபட்டு புதுக்கணக்கு தொடங்குவது அவர்கள் வழக்கமாகும்.

7. திருமால் மூன்று உலகங்களையும் இரண்டடியால் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனைப் பாதாள உலகில் வாழச் செய்தார். மகாபலி ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே பூமிக்கு வந்து போக அருள் செய்யும் படியும் அந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்படியும் திருமாலிடம் வரமாகப் பெற்றான்.

அந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. எனவே தீபாவளி கிருஷ்ணா அவதாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது என்பது பல புராணக் கதைகள் மூலம் தெரியவருகிறது. பிற்காலத்தில் நரகாசுரன் கதையும் தீபாவளியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Posted as received in WhatsApp..

வாழ்கை வாழ்வதற்கே அதை அனுபவித்து வாழ்வோமாக நண்பர்களே…

கன்யா பூஜை

நவராத்திரி ஸ்பெஷல்

*கன்யா பூஜை*

நவராத்திரி தினங்களில், பூஜை முடிந்த பிறகு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண் குழந்தையை அம்பிகையாக நினைத்துப் பூஜிக்க வேண்டும்.

இரண்டு வயது முதல் பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளே இந்தப் பூஜைக்கு ஏற்றவர்களாவர்.

ஒவ்வொரு நாளும்,குமாரி (2 வயதுப் பெண் குழந்தை), திருமூர்த்தி (3 வயதுப் பெண் குழந்தை), கல்யாணி (4 வயதுப் பெண் குழந்தை), ரோகிணி (5 வயதுப் பெண் குழந்தை), காளிகா (6 வயதுப் பெண் குழந்தை), சண்டிகா (7 வயதுப் பெண் குழந்தை), சாம்பவி (8 வயதுப் பெண் குழந்தை), துர்க்கா (9 வயதுப் பெண் குழந்தை), சுபத்திரா (10 வயதுப் பெண் குழந்தை) என்ற திருநாமங்களால், ஒவ்வொரு பெண் குழந்தையைப் பூஜிக்க வேண்டும்.

குழந்தையை, கோலமிட்ட‌ மணைப்பலகை மீது அமர்த்தி, கால்களில் மஞ்சள் பூசி, நலங்கிட்டு, நெற்றியில் சந்தன,குங்குமத் திலகமிட்டு, பூ வைத்து, இனிப்புப் பண்டங்களை உண்ணக் கொடுத்து, ஆடை, ஆபரணங்கள் வழங்கி மகிழ்விக்க வேண்டும். உணவளித்தல் சிறந்தது.

குழந்தையை தேவி ஸ்வரூபமாக எண்ணித் துதித்துப் பூஜிக்க வேண்டும்.

இவ்வாறு பூஜிக்கும் போது அவரவர் நாமங்களுக்கு மூல காரணமாயுள்ள அம்பிகையைக் கீழ்க்கண்ட ஸ்லோகங்களால் தியானிக்க வேண்டும். இந்த ஸ்லோகங்கள், ‘தேவி பாகவதத்தில்’ இருக்கின்றன.

குமாரரூய ச தத்வானி யாரூருஜத்யபி லீலயா
காதிநபிச தேவாம்ரூதான் குமாரீம் பூஜயாம்யஹம் ||

குழந்தை விளையாட்டுப் போல், (அனைத்துலகங்களையும் ரட்சிப்பதை) யார் செய்கிறாளோ, பிரம்மாதி தேவர்கள், எந்தச் சக்தியின் லீலையால், சிருஷ்டி முதலானவைகளைச் செய்கிறார்களோ, அந்த சக்தியான குமாரியை நான் பூஜை செய்கிறேன்.

சத்யரதிபிரூ திரிமூர்த்திர் யாத்தர்ஹி நாநாரூவரூபிணி
த்ரிகால வ்யாபிநீ சக்திரூ திரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

சத்வம் முதலான முக்குணங்களால் அநேக ரூபங்களாகவும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற முத்தொழில்களைப் புரிபவளாகவும் விளங்கும் தேவி, காலை, நண்பகல், மாலை என்ற மூன்று காலங்களிலும் எந்தச் சக்தியாக வியாபித்திருக்கிறாளோ, அந்த சக்தியாகிய திருமூர்த்தியை நான் பூஜிக்கிறேன்.

கல்யாண காரிணீ நித்யம் பக்தானான் பூஜிதாநிசம்
பூஜயாமி சதாம் பக்த்யா கல்யாணீம் சர்வகாமதாம் ||

பக்தர்களால் நித்தம் பூஜிக்கபடுபவளும், பக்தர்களுக்கு சகல மங்களங்களையும் அருளுபவளான கல்யாணியை நான் பூஜிக்கிறேன்.

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம சஞ்சிதாநிவை
யாதேவி சர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||

எல்லா உயிரினங்களின் பூர்வ கர்ம பாப வினைகளை, எந்த சக்தியானவள், நிவர்த்திக்கிறாளோ, அந்த சக்தியான ரோஹிணியைப் பூஜிக்கிறேன்.

காளிகாலயதே சர்வம் பிரஹ்மாண்டம்ஸ‌ சராசரம்
கல்பாந்ந சமயேயாதாம் காளிகாம் பூஜயாம்யஹம் ||

பிரளயகாலத்தில், அண்டங்கள் அனைத்தையும் எந்தச் சக்தியானவள் சம்ஹரிக்கிறாளோ, அந்த சக்தியான, காளிதேவியைப் பூஜிக்கிறேன்.

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்ட முண்ட விநாசிநீம்
தாம்சண்ட பாபஹரிணீம் சண்டிகாம்
பூஜயாம்யஹம் ||

எந்தச் சக்தியானவள், சண்டமுண்டர்களை வதம் செய்து, மஹாபாதகங்களை நிவர்த்திக்கிறாளோ, அந்த சக்தியான, சண்டியை நான் பூஜிக்கிறேன்.

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை: பரிகீர்த்திதா
யஸ்யாஸ்தாம் சுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||

தேஜோரூபமான பரமாத்மாவின் இச்சையினால், எந்த சக்தியானவள், திருவுருவங்களைத் தரிக்கிறாளோ, சுகங்களைத் தருகிறாளோ, அந்த சக்தியான சாம்பவியைப் பூஜிக்கிறேன்.

துர்க்காத்ராயதி பக்தம்யா ஸதா துர்க்கதி நாசினீ
துர்ங்ஞேயா சர்வ தேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம் ||

துர்க்கதியைப் போக்குகின்றவளும், தேவர்களாலும் அறிய முடியாதவளும், பக்தர்களை ரக்ஷிக்கின்றவளுமாய், எந்த சக்தியானவள் விளங்குகிறாளோ, அந்த சக்தியான துர்க்கையை நான் பூஜிக்கிறேன்.

சுபத்திராணி ச பக்தானாம் குருதே பூஜிதாசதா
அபத்ரநாசிநீம் தேவீம் சுபத்திராம் பூஜயாம்யஹம் ||

தன்னைப் பூஜிக்கிறவர்களுக்கு, மங்களங்களைச் செய்து, அமங்கலங்களை எந்தச் சக்தியானவள் போக்குகின்றாளோ, அந்தச் சக்தியான சுபத்திரையைப் பூஜிக்கிறேன்.

குமாரியைப் பூஜிக்க தனலாபமும், திருமூர்த்தியைப் பூஜிக்க வம்சவிருத்தியும், கல்யாணியைப் பூஜிக்க வித்யையும், ரோகிணியைப் பூஜிக்க நோய் தீர்தலும், காளியைப் பூஜிக்க சத்ருவிநாசமும், சண்டிகையைப் பூஜிக்க ஐஸ்வரியமும், சாம்பவியைப் பூஜிக்க போரில் வெற்றியும், துர்க்காதேவியைப் பூஜிக்க, செயற்கரிய செயலை செய்து முடிக்கும் வல்லமையும், இகபரசுகங்களும், சுபத்திரையைப் பூஜிக்க, எல்லா விருப்பங்கள் நிறைவேறுதலும் கிட்டும்.

ஒன்பது நாளும் தனித்தனியே ஒவ்வொரு குழந்தையைப் பூஜிக்க இயலாதவர்கள், ஒன்பதாவது நாளான மஹா நவமியன்றோ அல்லது ஐந்தாம் நாளான பஞ்சமியன்றோ, ஒன்பது குழந்தைகளை வைத்துப் பூஜிக்கலாம்.

நவராத்திரி தினங்களில் பெண்மையைப் போற்றும் விதமாக அமைந்துள்ள கன்யா பூஜையைச் செய்து, அம்பிகையை தொழுது,
வெற்றி பெறுவோம்!!!

*நவராத்திரி நல்வாழ்த்துக்கள்*

திருப்பதி ஏழுமலையான் கோயில்

🙏திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.

காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.

பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.

பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.

அந்நேரத்தில் “”கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.

பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் “போக ஸ்ரீனிவாச மூர்த்தி” பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.

அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.

அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.

சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.
சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து “நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.
“விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.

இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-.

மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும்.

ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.
(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.

பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்.

சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.

பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.

முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.

மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.

பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.

சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.

குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள்.
இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

🙏சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.

அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.
ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.

ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.

பூ கட்டுவதற்கு என “யமுனாதுறை” என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.

காலை 3.45 மணிக்கு “தோமாலை சேவை” ஆரம்பமாகும்.

சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.

பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.

பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.

அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.

இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220.
இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.

இந்த சேவை ராமானுஜர் காலத்தில், “தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.

பின்னர் தெலுங்கில் “தோமாலா சேவா என மாறிவிட்டது.

🙏கொலுவு தர்பார்:
ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.

இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.

இதற்காக உள்ள “கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி” விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.

இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.

ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.

பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.

அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.

மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு.

மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

🙏🔔முதல் மணி:
அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும்.

அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.

மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

🙏🔔🔔இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும்.

அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.

ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

🙏சகஸ்ரநாம அர்ச்சனை:
கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும்.

விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.

இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும்.

நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.

இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள்.

சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு “அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர்.

இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும்.

காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

🙏சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.

இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

🙏ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.
அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு “சாலிம்பு என்று பெயர்.

மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

🙏கல்யாண உற்சவம்:
திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது.

அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும்.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள்.

சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.

ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார்.

விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.

கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.

திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

🙏ஊஞ்சல் சேவை:
மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை “டோலாத்ஸவம் என்பர்.

அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும்.

ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.

மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்

*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*

——————- ——————

*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*

*அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..!*

*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….?*

*குளியல் = குளிர்வித்தல்*

*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*

*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*

*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*

*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*

*வெந்நீரில் குளிக்க கூடாது.*

*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*

*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*

*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*

*எதற்கு இப்படி?*

*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*

*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*

*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*

*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*

*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*

*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*

*இது எதற்கு… உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*

*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*

*வியக்கவைக்கிறதா… !*

*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*

*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*

*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*

*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*

*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*

*குளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத்திற்கு முன்*

*குளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.*

*குளித்தல் = குளிர்வித்தல்*

*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*

*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*

இதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து லைக் செய்வதற்கு பதில் முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக் கிடைக்கும்.

நன்றி👏👏

நவராத்திரி ஸ்பெஷல் ! தாம்பூலம்

*நவராத்திரி ஸ்பெஷல் ! தாம்பூலம் !*

*அம்பிகை விரும்பும் தாம்பூல உபசாரம் :*

*{ அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் )*💐🌷🌹🤝🙏

.தாம்பூலம் தரும் முறை. !
தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.

உயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம்.’அதிதி’ என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, ‘பசி ‘ என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும். அவர் கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஆனால் அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் அளித்தல் வேண்டும்.

வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும்.
வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.

எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்குப் பின் தாம்பூலம் படைத்து வழிபட வேண்டும். சாக்தர்கள் தங்கள் பூஜையில், தேவிக்கு, முக்கோணவடிவிலான தாம்பூலம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
தாம்பூல பூரித முகீ…………..என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.இதன் பொருள்’தாம்பூலம் தரித்ததால்,பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்’என்பதாகும்.

விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, ‘நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர்.

தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.

திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.

விசேஷங்களுக்கு அழைக்கச் செல்லும்போதும் தாம்பூலம் வைத்து அழைப்பது மிகுந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப் படுகிறது.விருந்து உபசாரங்கள் தாம்பூலத்துடனேயே நிறைவு பெறுகின்றன.

வெற்றிலை போடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றாலும் இது சத்வ குணம் கொண்டதல்ல. ஆகவேதான் பிதுர் தினங்களில் வெற்றிலை போடலாகாது.

பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம்.
இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.

1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14.
ஸ்லோக புஸ்தகம் 15. ரவிக்கைத்துணி அல்லது புடவை.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம்.

மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.

சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,

கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,

வளையல், மன அமைதி பெற‌

தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)

பழம்,அன்னதானப் பலன் கிடைக்க,

பூ, மகிழ்ச்சி பெருக,

மருதாணி, நோய் வராதிருக்க,

கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,

தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,

ஸ்லோக புஸ்தகம் – வித்யா தான பலன்

ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌
வழங்குகிறோம்.

மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. காலப் போக்கில், ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே.

தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள். தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும். வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து, அந்தஸ்துவேறுபாடு,பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

தாம்பூலம் வாங்கிக் கொள்பவர் அம்பாளின் சொரூபம். அம்பிகைக்குச் செய்யும் பூஜையாக நினைத்துத் தான் தாம்பூலம் தர வேண்டும். அவர் நமக்குப் பிடிக்காதவர் என்பதற்காக, உபயோகித்ததைத் தந்தால், பின் விளைவுகள் நமக்குத் தான்.

மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. நம் எல்லோர் இதயத்துள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள்.

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா ”

என்கிறார் அபிராமி பட்டர்.

நவராத்திரிகளில் ‘கன்யாபூஜை’ செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை (சுமங்கலிகளுக்குப் உணவளித்து, நலங்கு இட்டு, பின் தாம்பூலம் தருதல், இதையே சற்று விரிவாக, ‘சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்கிறோம்) முதலியவையும் சிறந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம்பூலம் கொடுப்பதாலும் பெறுவதாலும் சுபிட்சம் விளையும். சிலர், சுபகாரியத் தடை நீங்க பூஜைகளும் பரிகாரங்களும் செய்பவர்கள் தாம்பூலம் தந்தால் பெறுவதில்லை. அந்த தோஷங்கள் தம்மைத் தொடரும் என்ற பயமே காரணம். அடுத்தவருக்கு நன்மை தராத எந்தச் செயலும், சம்பந்தப்பட்டவருக்கு நன்மை அளிப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

எல்லா உயிர்களிலும் தேவியின் அம்சம் உள்ளது. ஆகவே, யாராவது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தால், கட்டாயம் போக வேண்டும். வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தாமல் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பண்டிகை நாட்களில் பலரும் கூடி இருக்கும் நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் இருந்தால் அவர்கள் மனம் நோகாமல், அன்பளிப்புப் பொருட்களை வழங்கி,அவர்களை நமஸ்கரித்து, அவர்கள் ஆசியைப் பெறுவது சிறந்தது.

தாம்பூலம் தரும் முறைகள்:

1. தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.

2. பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மணை அல்லது பாய் போட்டு அமர்ந்து கொண்டு வாங்கவேண்டும். நலங்கு இடுவதானால், தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து, கால் அலம்பி வரச் சொல்லி, பிறகு உட்கார்த்தி வைத்து நலங்கு இடவும்.
பானகம் முதலிய பானங்களைக் குடிக்கத் தரவும். இல்லையென்றால் தண்ணீராவது தர வேண்டும்.

3. பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.

4. தேங்காய் அளிப்பதானால், அதில் லேசாக மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அதைத் தாம்பூலப் பொருட்களோடு சேர்த்து, அம்மன் முன் காட்டவும். தேங்காயின் குடுமிப் பகுதி அம்பாளைப் பார்த்து இருக்க வேண்டும். அம்பாளின் அருள் அதில் இறங்கி, கொடுப்பவரும் வாங்குபவரும் நலம் பெற வேண்டிக்கொள்ளவும்.

5. பின் தாம்பூலப் பொருட்களை ஒரு தட்டில் வைத்துத் தரவும்.

6.பெற்றுக் கொள்பவர் வயதில் இளையவர் என்றால், அவர், கொடுப்பவருக்கு நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்ளவும்.

7.வயதில் பெரியவருக்குத் தாம்பூலம் கொடுப்பதானால், தாம்பூலம் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும்.

8. கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தாம்பூலத்தை முறத்தில் வைத்து, மற்றொரு முறத்தால் மூடிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. முறம் மஹாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கருகமணியும் தாம்பூலத்தில் வைத்து வழங்குகின்றனர்.

புடவைத்தலைப்பால் முறத்தை மூடி, தாம்பூலம் வழங்குகின்றனர். பெற்றுக் கொள்பவரும் அவ்வாறே பெறுகிறார்.

அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்

தர்மம், ஈகை, தயை, சாந்தி போன்ற குணங்கள் உலகில் பரவ வேண்டி, அம்பிகையைத் தொழுது வணங்கி, தாம்பூலமளித்து,வெற்றி பெறுவோம்!..

இவ்வாறு நாம் சுமங்கலிப் பெண்களுக்கு அளிக்கும் தாம்பூல உபசாரத்தில் அன்னை ஆதிபராசக்தியானவள் அகமகிழ்ந்து சகல சௌபாக்யங்களையும் தந்தருளி தீர்க்கசுமங்கலியாக வைத்திருப்பாள்.

*நவராத்திரி விழா நல்வாழ்த்துகள் !*

*தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !*

கன்னிகாதானம்” என்றால் என்ன

1.கன்னிகாதானம்” என்றால் என்ன?

2.திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள்.
நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு.
ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்!
திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண்மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வையே கன்யாதானம் அல்லது கன்னிகாதானம் என்கிறார்கள்!

இந்த உலகில் பலவித தானங்கள் செய்யப்பட்டாலும் அவை எல்லாவற்றிலும் உயர்ந்தது இந்த கன்னிகாதானமே என்பதற்கு இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமுமே சாட்சி.

‘தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..’ என்று அந்த மந்திரம் நீள்கிறது.

அதாவது, கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வருகிற பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவனது தலைமுறையையும் சேர்த்து ஆகமொத்தம் இருபத்தியோரு தலைமுறைகளையும் கரைசேர்க்கும் விதமாக இந்த கன்னிகாதானம் என்று அழைக்கப்படுகிற மகாதானத்தைச் செய்கிறேன் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

உன் வம்சவிருத்திக்காக எம் குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யக்கூடிய கன்னிகாதானமே உலகில் அளிக்கப்படுகின்ற தானங்களில் மிகப்பெரியது என்று சாஸ்திரம் போற்றுகிறது.

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு தலைமுறை மட்டுமே கரையேறும்.
ஆனால், பெண்பிள்ளையைப் பெற்று, அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால், அவனது வம்சத்தில் 21 தலைமுறைகளும் கரையேறுகிறது என்றால் பெண்பிள்ளையைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட புண்ணியம் செய்தவன் என சிலாகிக்கிறார்கள் சான்றோர்கள்!

ஆக, பெண்பிள்ளையைப் பெற்றவன், இருபத்தியோரு தலைமுறையைக் கரையேற்றும் வாய்ப்பைப் பெற்றவன் என சாஸ்திரம்சொல்கிறது…

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.

அந்த நேரங்களில் பெண்ணே *ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,* அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து *வம்சவிருத்தியை நீ தரவேணும்* என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே *பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ* அதுபோல் இந்த பெண்ணிடமும் *அறிவும் ஆற்றலும்* உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் *இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்* அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் *சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.*

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.